Skip to main content

Posts

இந்தி ஏன் எதிர்க்கப்பட வேண்டும்

பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட நாட்டில் கல்வி மற்றும் அரசாங்க(நீதித்துறை உட்பட) மொழியாக ஒரு பொது மொழியை அறிவிப்பதன் மூலம் கல்வி மற்றும் அரசாங்க அங்கங்களோடு தொடர்பு கொள்ளுதலில் மக்கள் வேகமாக முன்னேறி கொண்டு வரும் போது அதற்காக தன் தாய் மொழியை வெறும் வீட்டளவில் மட்டும் பயன்படுத்தும் ஒரு சூழல் வந்து முற்றிலும் அதன் தொடர்பே அழியும் நிலையும்,அந்த மொழிசார்ந்த படைப்புகள் வழக்கொழிந்து போகும் நிலையும் உருவாகும்.

இந்தியாவில் மொழி ஆதிக்கத்தின் மூலம் பிற மொழிசார்புகளை அழிக்கும் வல்லமை இந்தி மொழிக்கு மட்டுமே உண்டு.
ஏனென்றால் இந்திய வரலாற்றை சிறிது பார்த்தல் புரியும். இந்தியாவில் மேலாதிக்கம் செலுத்தும் பார்ப்பனியம் எல்லா மட்டத்திலும் தன் மேலாதிக்கத்தை 1000 வருடங்களுக்கு மேல் செய்து வருகிறது. அதில் குறிப்பிட்ட அம்சமாக உள்ளது. மொழி.
மொழியின் மூலம் தன் கலாச்சாரத்தை அது அடிமைப்படுத்த நினைக்கும் மக்களிடம் திணிக்கமுற்பட்டது.
இது சமஸ்கிருதம் என்ற மொழியை தான் மட்டுமே வைத்து பிறரிடம் அதைகாட்டி தன் அறிவு மேன்மை உள்ளவர்களாக காட்ட முயன்றதில். அறிவு மேன்மை உள்ளவர்களாக மக்களிடம் காட்டுவதில் வெற்றி பெற்ற அவர்கள். மொழியை …
Recent posts

நம்மை விழுங்கபோகும் காவி-கார்ப்பரேட் பாசிசம்

60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி என்பது கொள்ளை,கொலை,பாசிசம் என்று பலவற்றிற்கு பெயர் போனாலும் அது ஒரு சாதாரண ஆளும் வர்க்க கட்சியாக கருதப்படுவதன் நோக்கம் அது இந்தியாவை இந்தியாவாகவே நகர்த்தி சென்றது.ஆனால் தற்போதைய பாஜக அரசு காங்கிரஸ் செய்த அனைத்து கொடுங்கோன்மைகளையும் காங்கிரஸை விட மூர்க்கமாக செய்தாலும் அது கூடுதலாகவும் முதன்மையாகவும் ஒன்றை செய்கிறது, அது இந்தியாவை முழுமுதற் பழய இனவாத பாசிச காட்டாட்சி நாடாக முயற்சிக்கிறது.இதற்காக 100 ஆண்டுகாலமாக சிறுக சிறுக தனது அடிமட்ட பிரச்சாரத்தால் RSS ம் அதன் சங்க பரிவாரங்களும் வேர் வரை ஊடுருவியுள்ளன. பாஜக வுக்கு ஓட்டுபோடாதவர்களும் இது இந்துத்துவா நாடு என்றாலும்,சாவர்க்கர்,கோட்சே முதலானவர்களை  ஆர்ப்பரிப்போடு ஆதரிக்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளனர். இது வெறும் தேர்தல் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல, அதையும் தாண்டியது.பாஜக மீண்டும் அசுரபலத்தோடு ஆட்சி அதிகாரத்தில் ஏறிவிட்டது. சில அரசியல் விமர்சகர்கள் இது சுழற்சி அடிப்படையிலானது அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடும் என்றெல்லாம் அரசியல் ஆருடம் கணிக்கின்றனர். ஆனால் அடுத்த தேர்தல்கள் நடக்குமா? என்பதே இங்கு கேள்விகுறி?கார…

இந்திய வானில் உதித்த சிவப்பு நட்சத்திரம்: தோழர் பகத்சிங்

உலகத்தையே தன் கைப்பிடிக்குள் வைத்து சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என மார்த்தட்டிகொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அதன் மார்பில் ஏறி நேருக்கு நேர் நின்று எதிர்த்தான் ஒரு இந்திய இளைஞன்.அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை இந்த இளைஞனை போலவே இந்தியாவில் பலரும் எதிர்த்தனர். ஆனால் அவர்களையெல்லாம் கண்டு அச்சப்படாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அந்த இளைஞனையும் அவரின் நண்பர்களையும் கண்டு அச்சம் கொண்டது.அந்த இளைஞனை பிடிக்க பெரும் முயற்சி மேற்கொண்டது பிரிட்டிஷ் படை. பாவம் அந்த இளைஞனின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.பிரிட்டிஷ் படையை நடுநடுங்க வைத்த அந்த இளைஞன்தான் மாவீரன் என்றும் தியாகி என்றும் மக்களால் அன்போடு அழைக்கப்படும் நம் தோழர் பகத்சிங்.எதிரிகளால் நெருங்கவே முடியாத பகத்சிங் தானாக வந்து எதிரிபடையிடம் சிக்கினார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம். தன் உயிர் நிச்சயம் பறிக்கப்படும் என்று தெரிந்தும் அவர் பிரிட்டிஷ் படையிடம் வேண்டுமென்று மாட்டிக்கொண்டார்.அன்றைய தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டமாக இருந்ததால் அதை எதிர்த்தாக வேண்டும். ஆனால் அன்றைய ஒட்டுண்ணி பாராளுமன்ற அரசியல்வாதிகள் ஆங்கிலேயன் கொடுத்த பதவி சுக…

ஏன் இந்த பொருளாதார நெருக்கடி?

1990 க்கு பிறகான உலகமயம், தாராளமயம், தனியர்மயம் என்கிற புதிய பொருளாதார கொள்கைகளுக்கு பிறகு இந்திய நாடு பொதுத்துறை முதலீடுகளை சிறுக சிறுக குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை தனியார் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி திறந்து விட்டது.அதற்கு அரசு சொன்ன காரணம் அரசிடம் பணம் இல்லை, தனியார்  முதலீட்டாளர்களிடம் பணம் கொட்டிக்கிடக்கிறது. அவர்கள் இந்த நாட்டில் முதலீடு செய்வதன்மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும், உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரிக்கும் நாடு பொருளாதாரத்தில் முன்னேறும் என்பவைதான் அந்த காரணங்கள்.இந்த புதிய பொருளாதார கொள்கை மூலம் உலக வர்த்தக கழகம் என்கிற பெருமுதலாளிகளின் சேவை நிறுவனம் இந்திய அரசை வலியுறுத்தியது என்னவென்றால், அரசு தன்னுடைய பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஆட்சி செய்வதை மட்டும் பார்க்கவேண்டும். பொருளாதாரம் என்பது தனியார் முதலீட்டாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதை எடுத்த எடுப்பில் செய்யாமல் படிப்படியாக அமல் படுத்தவேண்டும் என்றும். சேவைதுறைகளை முழுவதுமாக தனியாரிடம் விட்டுவிட்டு. பொதுத்துறை மற்றும் நாட்டின் முதன்மை தொழில்களையும் படிப்படியாக தனியார்மயமா…